திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் 12 பேர் கொண்ட படை சோதனை நடத்தியது.
சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் ரூ.6,53,767 லஞ்சம் பெறப்பட்டது அம்பலமானது.
சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மேலாளர் செல்வகுமார் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.