
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட (FCRA) திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் தனித்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்று வாதிட்ட நிலையில், பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
எஃப்.சி.ஆர்.ஏ மசோதா சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை பாதிக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் தீர்மானத்தின் போது வாதிட்டனர்.