
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சியின் தோல்வியால், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பால் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 8.7 சதவீதம் சரிந்து 94.62 டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் எண்ணெய் 8.3 சதவீதம் சரிந்து 88.12 டாலராகவும் குறைந்தது.
கடந்த ஆகஸ்ட் 31-க்குப் பிறகு இத்தகைய விலைக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.