தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய கேரளம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் நாளை 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.