
ஜப்பானின் ஹன்ஷோ நகர் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 78 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.
இந்த இயற்கை பேரிடரால் இபாரகி, ஷிபா மற்றும் சைடமா ஆகிய நகரங்களில் மொத்தம் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், அதிகாலை நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.