மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் சூழல் மற்றும் சவுதி அரேபியா மீதான ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 22-ம் தேதி நிலவரப்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.2 சதவீதம் உயர்ந்து ஒரு பேரலுக்கு 110.11 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை 1 சதவீதம் உயர்ந்து 98.12 டாலராகவும் எட்டியது.
இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் சுமார் 88.7 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படும் நிலையில், இந்த விலை உயர்வால் கூடுதல் செலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது.