
அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் நடித்துள்ள 'ஜான் டோ' திரைப்படம் நவம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சஞ்சனா நடராஜன், அர்ஜுன் தாஸுடன் இணைந்து 2-வது முறையாகப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மதுமிதா இயக்கியுள்ள இக்கதை ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் எனவும், பெண் கலைஞர்கள் அதிகமாகப் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.