
கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய் மற்றும் ஐஸ்வரியா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பர் நகரம்’ திரைப்படத்தை அக்டோபர் 27ஆம் தேதி வரை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தனது சம்பள பாக்கியை வழங்காமலும், தடையின்றி சான்று பெறாமலும் புதிய தயாரிப்பாளர் ஆர்.ரமேஷ் படத்தை வேறு இயக்குநரை வைத்து இயக்கியுள்ளதாகக் கோபி நயினார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, தயாரிப்பாளர் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.