
ரஞ்சி கோப்பை டி பிரிவு ஆட்டத்தில் இமாச்சல அணிக்கு எதிராக மும்பை அணியின் சர்பராஸ் கான் 228 பந்துகளில் 19 பவுண்டரிகளுடன் 154 ரன்களைக் குவித்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளுக்கு 398 ரன்கள் எடுத்து 258 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 528 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.