
முதல்வர் விஜய்யின் 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை ஆதரித்து வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை வைஷாலி, தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சாமானிய மக்களின் மின் கட்டணம் அதிகமாக வருவதால், தவெக வாக்குறுதிப்படி செயல்படவில்லை என அவர் தனது புதிய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
200 யூனிட் இலவச திட்டத்தை விட பழைய மின் கட்டண முறையே மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், இல்லையெனில் அரசு மீதான நம்பிக்கை குறையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.