
ககமிகஹாராவில் நடந்த ஆசிய விளையாட்டு பெண்கள் ஹாக்கி பைனலில் நடப்பு சாம்பியன் சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா வரலாற்றுத் தங்கம் வென்றது.
போட்டியின் 10வது நிமிடத்தில் லால்ரெம்சியாமி அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த நிலையில், கோல்கீப்பர் பிச்சு தேவி சீனாவின் பெனால்டி கார்னர் வாய்ப்புகளைத் தடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 1982 டெல்லி போட்டிக்குப் பின் 44 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற இந்திய அணி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றதுடன் வீராங்கனைகளுக்கு தலா ரூ. 11 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.