
திரைத்துறையில் 51 ஆண்டுகளைக் கடந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவதை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சுயசரிதை புத்தகம் பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாக அமையும் என்று சௌந்தர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஜினியின் வாழ்க்கை பயணம் குறித்த இந்த புத்தகம் எதிர்காலத்தில் திரைப்படமாகவும் உருவாக்கப்படும் என்று அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.