
இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தான் பகுதியில் 100 நாட்களுக்கும் மேலாக நிலவிய வறட்சியால் காடுகளில் கடுமையான காட்டுத்தீ பரவியது.
தீயணைப்பு வீரர்கள் போராடியும் கட்டுக்குள் வராத இந்தத் தீயினால் ஏற்பட்ட நச்சு புகைமூட்டம் அண்டை நாடுகளையும் பாதித்தது.
இந்நிலையில் பெய்த திடீர் கனமழையால் காட்டுத்தீ அணைந்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் மண்டியிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவித்தனர்.