
பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களுக்குட்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த பயிற்சிக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் டாக்டர் ரகுநந்தன் இந்த பயிற்சியை வழங்கி, காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்து விளக்கமளித்தார்.
டெங்கு கண்டறியப்பட்ட நோயாளிகள் குறித்த விவரங்களை I.H.I.P மற்றும் HIMS மூலம் மாநகராட்சிக்கு தகவல் அளிக்க வேண்டியதன் அவசியமும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.