
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே இணைந்து நடித்துள்ள 'அக்கா' வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
வரும் அக்டோபர் 30-ம் தேதி தீபாவளி வார ட்ரீட்டாக இந்தத் தொடர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1980களில் தென்னிந்தியாவில் கிராமத்தை ஆளும் பெண் கேங்ஸ்டர்களை மையமாக வைத்து தர்மராஜ் ஷெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.