
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் நாளை மறுநாள் (செப்.28) தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவுக்கு முன்பாக, சமீபத்தில் குடமுழுக்கு நடந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று முதல்வர் சாமி தரிசனம் செய்கிறார்.
மதுரை சுற்றுப் பயணத்தின்போது காந்தி அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் முதல்வர், சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.