
டொயோட்டா நிறுவனம் இன்னோவா கிரிஸ்டா லிமோ எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இதன் தொடக்க விலை ரூ. 19.95 லட்சமாகும்.
வணிகப் பயண வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ள இந்த லிமோ எடிஷன் 7 மற்றும் 8-சீட் ஆப்ஷன்களில் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட 2.4-லிட்டர் டீசல் என்ஜினுடன் வருகிறது.
இந்த கார் 3 ஆண்டுகள் அல்லது 1,00,000 கி.மீ. நிலையான வாரண்டியுடன் வழங்கப்படுகிறது.