
அதிகரித்து வரும் அணு ஆயுதப் போர் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என லான்செட் ஆய்வு எச்சரித்துள்ளது.
2100-க்குள் மனிதகுலத்தின் இருப்புக்கே ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம் என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபாயங்களைத் தவிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.