மின்னிலக்க நாணய நிறுவனங்களில் வேலை தருவதாகக் கூறி நடந்த இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு $15.11 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் கூகுள் மீட் மூலம் நேர்காணல் நடத்தி, விண்ணப்பதாரரின் கணினியில் தீங்குநிரலை பதிவிறக்கம் செய்து நிறுவனத்தின் கணினி கட்டமைப்பை ஊடுருவியுள்ளனர்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் காவல்துறை இணைந்து, வேலை தேடுவோர் போலி இணையப் பக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளன.