International
சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: இந்திய மாலுமி உள்பட 5 பேர் பலி

சோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: இந்திய மாலுமி உள்பட 5 பேர் பலி

Daily Thanthi1h
THE BRIEF
1

மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு பலாவு நாட்டு கொடியுடன் சென்ற கப்பலை கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் அருகே கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.

2

இன்று சோமாலியா கடற்படையினர் கடத்தப்பட்ட கச்சா எண்ணெய் கப்பலை மீட்ட நிலையில், மீட்பு நடவடிக்கையின்போது கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் இந்தியர் உள்பட 5 மாலுமிகள் உயிரிழந்தனர்.

3

உயிரிழந்த 5 பேரில் ஒருவர் இந்தியர், ஒருவர் மியான்மர் நாட்டவர் மற்றும் 3 பேர் பாகிஸ்தான் நாட்டவர் ஆவர்; எஞ்சிய 12 மாலுமிகளும் கப்பலும் பத்திரமாக மீட்கப்பட்டன.