
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பீகார் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், 4 மாதங்களாக ரஷியாவில் இருக்கும் முகமது சதகத் என்பவர் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.
பீகாரில் கடந்த 25-ந்தேதி நடைபெற்ற போராட்டம் தொடர்பாக இதுவரை 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மைனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தவறாக தனது பெயர் FIR-ல் சேர்க்கப்பட்டுள்ளதாக முகமது சதகத் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், போராட்டம் தொடர்பான குறைகள் உள்ளவர்கள் காவல்துறையை அணுகலாம் என கிஷன்கஞ்ச் எஸ்.பி. ஹரி மோகன் சுக்லா தெரிவித்துள்ளார்.