
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ படத்தின் டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார், இது இயக்குநரின் சொந்த அனுபவத்திலிருந்து உருவான கதை என்று கூறப்படுகிறது.
6 வருட உழைப்பில் உருவான இப்படம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்று படத்தின் நாயகன் ரிஷிகாந்த் விழாவில் தெரிவித்தார்.