
பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மெக்காவில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் புதிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டாகச் செயல்படும்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்புக்கு இணையாக, முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைக்கும் இந்த புதிய கூட்டமைப்பு 'முஸ்லிம் நேட்டோ' என்று அழைக்கப்படுகிறது.