
எம்.செல்வக்குமார் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் அமீர் நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் 59 விநாடி க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில், தென்மாவட்ட காவல் தெய்வமான சுடலைமாடன் கதையை மையமாக வைத்து, அருள்நிதி சாமியாடியாக நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு சுடலைமாடன் கதையைத் திரைக்குக் கொண்டுவரும் முயற்சியாக இப்படம் பார்க்கப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.