
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாகக் கூறி, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2018-ல் மத்திய பாஜக அரசால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆணையத்தின் உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில் பாஜக தெளிவான நிலைப்பாட்டில் உள்ளதாகக் கூறிய அவர், காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அக்கறையின்மையை விமர்சித்துள்ளார்.