
தைவானில் நடைபெறும் தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹூடா மற்றும் தன்வி ஷர்மா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
உன்னதி ஹூடா 23-21, 21-16 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை தேவிகா சிஹாக்கை வீழ்த்தி தனது வெற்றியைப் பதிவு செய்தார்.
மற்றொரு போட்டியில் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கடேதோங்கை 21-15, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் போராடி வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.