
கொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பயங்கரவாதி ஒருவன் காரை நிறுத்திவிட்டு வெடிக்கச் செய்ததில் 2 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்தபோது பாதுகாப்புப் படையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றான்.
புதிய ஜனாதிபதி அல்பர்டோ டி லா எஸ்பிரிலா பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் கொலம்பியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.