
நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீஸ் மற்றும் கோகோ காப் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலினா கார்னிவாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் துருக்கியின் செனாப் ஜொன்மெசை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.