
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, ரூ.2,000 வரை செய்யப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளோ சேவை வழங்கும் நிறுவனங்களோ எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 740-க்கும் மேற்பட்ட வங்கிகள் UPI கட்டமைப்பில் இணைந்துள்ள நிலையில், மாதம் ஒன்றுக்கு சுமார் 2,366 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.