
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை நேற்று சுமார் 2% உயர்ந்துள்ளது.
செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஃபெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டி உயர்வுக்கான வாய்ப்பு 54% ஆகக் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.
அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாக உள்ள நிலையில், அவை தங்கத்தின் அடுத்தகட்ட விலை நகர்வைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.