
கொளத்தூர் தொகுதியில் 8,975 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மு.க.ஸ்டாலின், 14 வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த ஆய்விற்காக மு.க.ஸ்டாலின் பூத் ஒன்றுக்கு ரூ.47,200 வீதம் மொத்தம் ரூ.6,60,800 கட்டணம் செலுத்தியுள்ள நிலையில், 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
ஆய்வின்போது சில இயந்திரங்களில் விவிபேட் வேலை செய்யாதது மற்றும் முகவரிப் பட்டைகள் எழுதப்படாமல் இருந்தது போன்ற குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தி.மு.க. தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.