
ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உள்ள லாரக் தீவை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய திடீர் தாக்குதலில் ஏவுகணை தளங்கள் மற்றும் படகுகள் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ராணுவம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதுடன், துபாய்க்கு அருகே ட்ரோன் தாக்குதலையும் நடத்தியது.
லாரக் தீவு வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களிடம் ஈரான் தலா ரூ.19 கோடி சுங்க கட்டணம் வசூலித்து வந்த நிலையில், இந்த மோதலால் 83 எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.