சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் விளாசியதன் மூலம் 897 புள்ளிகளுடன் இந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 2-வது இடத்திலும், சக வீரரான இஷான் கிஷன் 3-வது இடத்திலும் உள்ளனர்.