
அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி 2 வாரங்களிலேயே 50,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்தத் தொடரில் 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என மொத்தம் 12 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள 2-வது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளில் 75 சதவீதம் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், ஆக்லாந்து மைதானத்தில் கூடுதல் இருக்கைகள் திறக்கப்பட உள்ளன.