
அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக, இங்கிலாந்து அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான குழுவில் பீட்டர்சன் இணைந்து, அடுத்த வாரம் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து தனது பணியைத் தொடங்குகிறார்.
தென் ஆப்பிரிக்க சூழல் குறித்த பீட்டர்சனின் அனுபவம் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.