
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எம்மா நவரோவாவை வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் 4-வது சுற்றில், ஸ்வியாடெக் பிரான்சின் டயானே பாரியை எதிர்கொள்கிறார்.