
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்த டால்பின் புயலால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
ஷாங்காயில் 24 மணி நேரத்தில் 313 மி.மீ மழை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ள நிலையில், புயல் பாதிப்பால் 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வென்ழோ நகரில் மட்டும் 9 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், ஹூபே மற்றும் ஹெனான் மாகாணங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.