
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது டிரைபர் மாடலில் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இதன் ஆரம்ப விலை ரூ. 7.84 லட்சமாகும்.
புதிய 1.0-லிட்டர் TCe டர்போ-பெட்ரோல் இன்ஜின் 99bhp பவர் மற்றும் 180Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளதுடன், லிட்டருக்கு அதிகபட்சம் 21 கி.மீ. மைலேஜ் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடல் எவல்யூஷன், டெக்னோ மற்றும் எமோஷன் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.