
இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத்தில் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.
சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள இந்த ஓவியங்கள் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் பாதுகாப்பு அலாரங்களை முறியடித்து கொள்ளையடிக்கப்பட்டன.
கொள்ளையர்கள் தப்பியோடும் அவசரத்தில் 2 ஓவியங்களை அங்கேயே போட்டுவிட்டுச் சென்ற நிலையில், இத்தாலி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.