
பள்ளிகளில் மாணவர்களுக்கான திருத்தப்பட்ட புதிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் வெளியிட்டார்.
இதன் மூலம் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்களும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 2 நாட்களும் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 6,000 உடற்கல்வி பணியிடங்களில் 2,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவாக நிரப்பப்படும் என்றார்.