
நடிகர் தனுஷ் தனது ரசிகர் நற்பணி மன்றங்களை தொகுதி வாரியாக வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்து தனுஷ் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அரசியல் அமைப்புக்கு பெயர் தேர்வு செய்வது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டாலும், தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.