
நியூசிலாந்துக்கு எதிரான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டிகளில் விளையாடும் 23 பேர் கொண்ட இந்திய அணியை தலைமைப் பயிற்சியாளர் கலீத் ஜமீல் அறிவித்துள்ளார்.
பிரேசில் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்டம் அமையாததால் அனுபவமிக்க கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் நவம்பர் 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆக்லாந்து மற்றும் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ளன.