
இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து 90 சதவீத ஸ்டீலை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய சந்தை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன் மூலம் பல்வேறு ஒதுக்கீட்டு முறைகள் வாயிலாக 28 லட்சம் டன் வரை ஸ்டீலை ஏற்றுமதி செய்ய முடியும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்கான தனிப்பட்ட ஸ்டீல் ஏற்றுமதி ஒதுக்கீடு மேலும் அதிகரித்து சுமார் 12.4 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.