
இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் இருசக்கர மின் வாகன விற்பனை 77 சதவீதம் அதிகரித்து, மொத்தம் 1.91 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டி.வி.எஸ். நிறுவனம் 52,035 வாகனங்களை விற்று முதலிடத்திலும், பஜாஜ் 43,137 வாகனங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஏத்தர் 28,540 வாகனங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கடந்த ஆண்டு ஜூலையில் 1.08 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஜூலை விற்பனை ஜூன் மாதத்தை விட 3,352 வாகனங்கள் குறைவாக பதிவாகியுள்ளது.