
நேற்று (ஆகஸ்ட் 24, 2026) நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, 'கன்னிப் பேச்சு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'அறிமுக உரை' அல்லது 'முதல் உரை' என பயன்படுத்த வேண்டும் என பெண் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திமுக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. லதா ஆகியோர் இந்த கோரிக்கையை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் முன்வைத்தனர்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த சட்டமன்றத்தில் வானதி சீனிவாசனும் இதே கோரிக்கையை முன்வைத்ததை நினைவுபடுத்தி, பேரவைத் தலைவர் இதை பரிசீலிக்க வேண்டும் என வழிமொழிந்தார்.