
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது, இதற்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
118.5 kWh பேட்டரி கொண்ட இந்த கார் 600 கி.மீ ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டதுடன், 350kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 22 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஆகிறது.
543 bhp பவர் மற்றும் 850 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த கார், 45 டிகிரி சரிவுகளில் ஏறும் மற்றும் 900 மி.மீ ஆழமுள்ள நீரில் செல்லும் திறன் கொண்டது.