
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் பொதுப்பணி ஆணையத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை எதிர்க்க சிஜேபி அமைப்பு களமிறங்கியுள்ளது.
அகில இந்திய மக்கள் தொடர்புத் திட்டமான 'க்யா போல்டி பப்ளிக்' மூலம் பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குறைகளை சிஜேபி கேட்கவுள்ளது.
2012-ல் மாற்றப்பட்ட யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு விதிமுறைகள் வட்டார மொழிக் கல்வி பயின்றவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதாக சிஜேபி ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே விமர்சித்துள்ளார்.