
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் செப். 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
ஆட்சி அமைந்த 116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகவும், காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குற்றங்கள் குறைந்ததாகக் கூறப்பட்டாலும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ரத்து செய்துள்ள அரசு, புதிய திட்டங்களை அறிவிக்காமல் பெயர் மாற்றும் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக உதயநிதி சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டினார்.