
மதுராந்தகம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. சுகந்தியும், தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ப. லட்சுமமணனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் ப. லட்சுமணன் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருவதுடன், தாராபுரம் தாலுக்கா குழு செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் பி. சுகந்தி மாநிலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளரும் ஆவார்.