
ஈரான் போர் தொடர்வதாலும் ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டிருப்பதாலும் உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்காவின் மிட்-டேர்ம் தேர்தலை இது பாதிக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஈரான் போரைத் தொடங்கியதற்காக தான் வருத்தப்பட்டதே இல்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு அணு ஆயுதம் ஒருபோதும் கிடைக்காது என்றும், அவர்கள் ஆட்சியைப் பிடிக்க முயல்வதாலேயே தன்னைத் தூக்க முயற்சிப்பதாகவும் அவர் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கூறினார்.